Advertisement

உலகம்: 17-ஜூன்-2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மியாமி விமான நிலையம் வந்தடைந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர்.மெக் மாஸ்டர் இருவரும் வாஷிங்டன் வெள்ளைமாளிகையின் தெற்கு வளாகத்திலிருந்து மரைன் ஒன் விமானத்தில் புறப்பட்டனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மாஸ்கோவில் நேற்று நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசினார்.
நியூ ஓர்லேன்ஸ் மேயர் மிட்ச் லேன்ட்ரி நேற்று வாஷிங்டன்னில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஸ்பெயின் நாட்டு பிரதமர் மாரியானோ ரஜோய் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் (இடது) இருவரும் பாரிஸில் உள்ள எலிசி மாளிகையில் சந்தித்து பேசினர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் நேற்று பாரிஸில் உள்ள எலிசி மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
லண்டன் கிரென்வெல் டவர் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
லண்டனில் உள்ள கிரென்வெல் டவர் கட்டடம் தீவிபத்துக்குள்ளானதால் அதில் பாதிக்கப்பட்டவர்கள் வெஸ்ட்வே ஸ்போர்ட்ஸ் சென்டரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் சந்தித்து விசாரித்தார்.
கனடாவின் ஒட்டாவா நகருக்கு வந்த பெல்ஜியம் பிரதமர் சார்லெஸ் மைக்கேல் (வலது) அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்ஸ்டனை (இடது) அவரது இல்லத்தில் சந்தித்தார்.
 
Advertisement