Advertisement

உலகம்: 16-ஜூன்-2017

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ்வெல்ட் அறையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாஸ்கோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கேல் பாலன் (வலது) மற்றும் ருமேனிய பாதுகாப்புத்துறை அமைச்சர் கப்ரீல் லெஸ் (இடது) இருவரும் ருமேனியா தலைநகர் பக்கேரஸ்டில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
கிரேக்க நாட்டின் தெஸாலோனிகி நகருக்கு இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு வருகை தந்தார். அவரை அந்நாட்டு பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸ் வரவேற்றார்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் தலைநகர் பெர்லின் வந்த எஸ்டோனியா பிரதமர் ஜுரி ரடாஸ் ஐ சந்தித்து பேசினார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் நேற்று தலைநகர் பாரிஸில் உள்ள விவாடெக்கில் நடந்த கேட்ஜட் கண்காட்சி ஒன்றை பார்வையிட்டார்.
பிரிட்டன் இளவரசர் ஹாரி நேற்று லண்டனில் உள்ள சாதம் ஹவுஸிற்கு வருதை தந்தார்.
சின் பைன் அதிபர் கெர்ரி ஆதம்ஸ் நேற்று லண்டனில் பிரதமர் தெரஸா மே ஐ சந்தித்த பின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement