Advertisement

உலகம்: 14-ஜூன்-2017

அல்ஜீரியா நாட்டின் அல்ஜியர்ஸில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அல்ஜிரியா வெளியுறவு அமைச்சர் அப்துல்காதர் மெஸாஹேல் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-ஈவ்ஸ் லே ட்ரியான் இருவரும் கைகுலுக்கினர்.
அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸில் உள்ள அரசு இல்லத்தில் ,அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரியும்(வலது) போர்ச்சுகல் பிரதமர் ஆன்டோனியோ கோஸ்டாவும் சந்தித்து பேசினர்.
பாரிசில் உள்ள எலிசி மாளிகைக்கு வந்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே-ஐ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் வரவேற்றார்.
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள கேபினட் அறையில் குடியரசுகட்சியின் செனட் பிரநிதிகளுடன் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
துருக்கியின் தலைநகர் அங்காராவில், ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சியின் பிரதிநிதிகளின் கூட்டத்தில், பேசிய அந்நாட்டு அதிபர் ரெசெப் டாயிப் எர்டோகன்.
 
Advertisement