Advertisement

உலகம்: 19-மே-2017

வாடிகன் நகருக்கு நேற்று வந்த இளம்வயது ஹுன்டிங்டன் நோயால் பாதிக்கப்பட்ட அர்ஜென்டைனா சிறுமியை போப் பிரான்ஸிஸ் வாழ்த்தினார். அருகில் அர்ஜென்டைனா பாடகர் ஏக்சல் உள்ளார்.
அமெரிக்கா வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் நேற்று வாஷிங்டன்னில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் (இடது) மற்றும் வாஷிங்டன் கவர்னர் ஜே இன்ஸ்லீ (வலது) இருவரும் சியேட்டல் நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிரிய அதிபர் பாஷர் ஆசாத் (வலது) மற்றும் ஈராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பலேஹ் அல் பாயத் (இடது) இருவரும் சிரியாவின் தமாஸ்கஸ் நகரில் சந்தித்து பேசினர்.
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று வாஷிங்டன்னில் நடந்த வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
தென்கொரியா அதிபர் தூதுவர் மூன் ஹீ சங் (இடது) நேற்று ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபேயை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சந்தித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள எலிசி மாளிகையில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதிபர் இமானுவேல் மாக்ரன் கலந்து கொண்டார்.
பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் வில்லியம் இருவரும் நேற்று லண்டன் செயின்ட் ஜேம்ஸ் மாளிகையில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
நேற்று லண்டனில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரேமி கோர்பினுக்கு ஸ்ரீ குரு சிங் சபா தலைப்பாகை அணிவித்தார்.
பிரிட்டன் முதல்வரும் பழமைவாத கட்சி தலைவருமான தெரசா மே நேற்று ஹாலிபக்ஸில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார்.
 
Advertisement