Advertisement

சம்பவம்: 11-அக்-2018

உ.பி., ரேபரேலியில் நேற்று, நியூ பராக்கா எக்ஸபிரஸ் ரயில் தடம் புரண்டது. ஏழு பேரை பலி வாங்கிய விபத்து நடந்த இடத்தில், போ லீசார் பார்வையிட்டு மீட்பு பணிகள மேற்கொண்டனர்.
கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதாச்சலம் கருவேப்பிலங்குறிச்சி சாலையில் புதிய பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதனருகே தற்காலிக சாலையில் மண் ஏற்றி வந்த லாரி சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி பெரியக் காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலாய பள்ளி இசை ஆசிரியர் வீட்டில் 8 சவரம் நகை திருடிய கீழ்புத்துப்பட்டு பெண் சாந்தியை கைது செய்த சப்இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையிலான போலீசாரை இன்ஸ்பெக்டர் ஹேமசந்திரன் பாராட்டினார்.
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் செய்தனர்.
புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது.
பாலிவுட் நடிகை பிரிதி ஜிந்தா நெஸ் வாடியாவுக்கு எதிரான சில்மிஷ வழக்கு தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் ஆஜரானார்.
உ.பி., மாநிலம் ராபரேலியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை தொடர்ந்து சம்பவ இடத்தில் பார்வையிட்ட அதிகாரிகள்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் நடந்த மகா சங்கல்ப காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்ட கட்சியினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் மாவட்டத்தில் நடந்த தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்த முதியவர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 14வயது சிறுமி பாலியன் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் சாலை போக்குவரத்து முடங்கியது. இதனால் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.
உ.பி., மாநிலம் ரா பரேலியில் நடந்த ரயில் தடம் புரண்ட விபத்தில் 7 பேர் பலியானார்கள் மேலும் 35 பயணிகளுக்கும் மேல் படுகாயம் அடைந்தனர்.
 

Download for free from the Store »

Advertisement