Advertisement

சம்பவம்: 10 ஆகஸ்ட் 2018

அடிமாலி லட்சம் காலணியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த சிறுமி நியாமுஜீப் உடல் மீட்க்ப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மூணாறு அருகே நல்லதண்ணீர் எஸ்டேட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சேதமடைந்த தேயிலைத்தோட்டம்.
விவசாய திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, பீஹார் மாநிலம், பாட்னாவில், சமாஜ்வா தி கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்திய, மராத்தா கிராந்தி மோர்ச்சா அமைப்பினர். இடம்: சாங்கிலி, மும்பை.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை மற்றும் பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி மாரதா கிராந்தி மோர்ச்சா அமைப்பினர் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் தங்களுக்கு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மாரதா கிராந்தி மோர்ச்சா அமைப்பினை சேர்ந்த பெண்கள்.
மாகாராஷ்டிரா மாநிலத்தில் மாரதா கிராந்தி மோர்ச்சா அமைப்பினர் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பந்திற்கு அழைப்பு விடுத்ததால் நாக்பூரில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்கள்.
ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கலைக்க வண்ணம் கலந்த நீரை போலீசார் பீச்சி அடித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் அரசு ஊழியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஆவாமி இதிகாட் கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Download for free from the Store »

Advertisement