Advertisement

சம்பவம்: 13-ஜூலை-2018

விருதுநகர் அழகாபுரி ரோட்டில் தனியார் பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். 48 பேர் காயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ரத யாத்திரைநடக்கவுள்ளதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக , அதிரடிப் படையினர்குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் இந்திய குடியரசு கட்சி சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாம்பரம் - வேளச்சேரி நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை செம்பாக்கம் நகராட்சி , நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர் .
புதுச்சேரி ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை வழங்க கோரி பேரணியாக சட்டசபை நோக்கி சென்றனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியினர் பிரதமர் மோடிக்கு எதிராக பக்கோடா தயாரித்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விதான்சவுதாவுக்கு முன்பு நானார் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement