Advertisement

சம்பவம்: 09-ஜூலை-2018

ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் கடல் அட்டையை கடத்தி வந்த நாட்டு படகை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை, மதுக்கரை அருகே எல் அண்டு டி பை பாஸ் ரோட்டில் கேரளா நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மும்பை அந்தேரி ரயில்நிலையத்தில் பலத்த மழை காரணமாக சிலநாட்களுக்கு முன் நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்தது. அதன் மீட்புபணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர் அஜீத்தாப் காணாமல் போய்விட்டார். அவரை கண்டுபடிக்க சி.பி.ஐ., ஏற்படுத்த வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் மென்பொறியாளர்கள் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா அமைப்பினை சேர்ந்த பெண்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் கலவரக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
 
Advertisement