Advertisement

சம்பவம்: 07-ஜூலை-2018

சென்னை, கொருக்குப்பேட்டை, கண்ணகி நகர் மற்றும் கருமாரியம்மன் நகரில் பல மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் ஆத்திரமடைந்த பெண்கள் குடங்களுடன் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல்லில் கூட்டுறவு ரேஷன்கடை ஊழியர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
குடிபோதையில் கார் ஓட்டியதால் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்குமாரின் கார் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
பீகார் மாநிலம் கிசன்கன்ஜ் மாவட்டத்தில் மென்சி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் மூலம் இடம் பெயர்ந்தனர்.
மும்பையி்ல் ஆரோக்கியா சேவிகா அமைப்பினை சேர்ந்த ஊழியர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் ஜவாத்பூர் பல்கலையில் 6 வகையான இளநிலை பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை நிர்வாகம் ரத்து செய்ததை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement