Advertisement

சம்பவம்: 03-ஜூலை-2018

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாப்பு கோரி தாம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்த்து
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக கூறி மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் மரத்தில் மோதி சேதமடைந்த தனியார் டூரிஸ்ட் பஸ்
கோவை சொக்கம்புதூர் கிருஷ்ண நகர் பகுதியில் பல லட்சம் ரூபாயில் போதை பொருள் பதுக்கி வைத்திருந்ததை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மூடநம்பிக்கையின் காரணமாக டில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து அவர்களது இறுதிச்சடங்கின் போது சோகத்துடன் காணப்பட்ட உறவினர்கள்.
மூடநம்பிக்கையின் காரணமாக டில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அந்த வீட்டின் அருகே குவிக்கப்பட்டுள்ள போலீசார்.
மும்பையில் அனைத்திந்திய வியாபாரிகள் சங்கத்தினர் அமெரிக்காவின் வால்மார்ட் கம்பெனிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் சி.பி.ஐ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் நடந்த குளறுபடிகளை கண்டித்து ஜன் அதிகார் கட்சி தலைவர் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மாணவர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரில், ஆளும் காங்கிரஸ் அரசு மாநிலத்தில் போதை மருந்துகள் புழக்கத்தை கட்டுப்படுத்தாதை கண்டித்து பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement