Advertisement

சம்பவம்: 15-பிப்-2018

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காதலர்களை விரட்டிய பஜரங் தள் அமைப்பினர். இடம்: ஆமதாபாத்.
ராஜஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் பலியான ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்திய ராணுவ வீரர்கள். இடம்: பெங்களூரு விமான நிலையம்.
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் நடத்தி வைத்த இந்து மக்கள் கட்சியினர். இடம்: சென்னை.
சன்ஞ்வான் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான போலீசாரின் இறுதி ஊர்வலம். இடம்: அரா, பீகார்.
கோவை வெடிகுண்டு சம்பவத்தில் பலியானோருக்கு விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் சார்பில் பேரூர் படித்துறையில் திதி கொடுத்தனர்.
ஊட்டியில், இந்து முன்னனியினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கும், ஆட்டிற்கும் திருமணம் செய்து வைத்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
கோவை சிறுவாணி ரோட்டில் மாதம்பட்டி அருகே கார் மரத்தில் மோதியதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர் சூசையாபுரம் ரேசன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டனர்.
வால்பாறை அருகே குழந்தையை கொன்ற சிறுத்தை 6 நாட்களுக்கு பின் வனத்துறை கூண்டில் சிக்கியது. சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தும் வனத்துறையினர்.
 
Advertisement