Advertisement

சம்பவம்: 14-பிப்-2018

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் தண்ணீர் கோரி நடந்த போராட்டம்.
கேரள மாநிலம், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் சாஹர் புஷாகன் என்ற கப்பலில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவலை அடுத்து ஸ்ரீநகர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சுன்ஜ்வான் ராணுவ முகாம் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை கண்டு கண்ணீர் சிந்திய பொதுமக்கள். இடம்: டிரால், ஜம்மு காஷ்மீர்.
ஜம்முவில் ராணுவ முகாம் அருகே சோதனையில் ஈடுபட்ட ராணுவ வீரர்.
சுன்ஞ்சுவான் ராணுவ முகாம் தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ராணுவ உயரதிகாரிகள். இடம்: ஜம்மு.
டி.ஒய்.எப்.ஐ., சார்பில் சிம்லாவில் நடந்த ரயில் மறியல் போராட்டம்.
தமிழ்நாடு அரசு அணைத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் போணஸ் தொகையை வழங்க கோரி கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பழநியில் ரயில் மறியல் செய்ய வந்தவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
காங்கயம் அரசு மருத்துவமனையில் இறந்த செவிலியருக்கு நீதி கோரி திருப்பூர் அரசு மருத்துவமனை முன் செவிலியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement