Advertisement

சம்பவம்: 03-டிச-2017

சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை நேற்று மாநகராட்சியினர் அகற்றினர்... எஞ்சிய பொருட்களை எடுத்துச் செல்லும் பெண்... இடம் : ஓட்டேரி..
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக தன் மகள் மிசாபன்தியுடன் வந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரோட்டை உடைத்துக் கொண்டு விவசாய நிலங்களில் பாய்ந்த வெள்ளநீரை விவசாயி ஒருவர் சோகத்துடன் பார்க்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் சேதமடைந்த வாழைத் தோப்பு.
மிலாடி நபியை முன்னிட்டு வாரணாசியில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட முஸ்லீம்கள்.
டில்லியில் புதிதாக பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை புதைப்பதற்கு சற்றுமுன் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. தவறுதலாக அறிக்கை வெளியிட்ட மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் பூந்துரா கடற்பகுதியில் மீனபிடிக்க சென்ற மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி மாயமாகி உள்ளனர். அவர்களின் உறவினர்கள் கதறி அழுத காட்சி இடம்: திருவனந்தபுரம்.
ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கட்டுப்படுத்தினர் இடம்: போபால்
 
Advertisement