Advertisement

சம்பவம்: 12-செப்-2017

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள்.
சிவகங்கை கலெக்டர் வளாகத்தில் ஜாக்டோ மற்றும் ஜியோ அமைப்பினர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் தளவாடி கிராமம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வன அலுவலர்கள் கேமிரா பொருத்தினர்.
ஊட்டி மாவட்டம் வெலிங்டன் அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்புபணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
ஹரியானா மாநிலம் குர்கானில் ரியான் உறைவிடப் பள்ளி முன் போராட்டம் நடத்தியவர்கள் மதுக்கடை ஒன்றிற்கு தீ வைத்தனர்.
மியான்மரில் ரோகின்யா முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து கோல்கட்டாவில் முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மியான்மரில் ரோகின்யா முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து கோல்கட்டாவில் மியான்மர் அரசு ஆலோசகர் அவுங்சான் சூ கியின் உருவப் பொம்மையை எரித்து முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியில் சட்ட விரோதமாக குடியேறும் ரோகின்ங்யா முஸ்லீம்களை கண்டித்து இந்து சேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போபாலில் கூட்டுறவு துறை ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் ஒருவரை போலீசார் இழுத்துச் சென்றனர்.
முசாபூரில் போலீஸ் வேன் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். அவரது குடும்பத்தினர் சோகமாக உள்ளனர்.
 
Advertisement