Advertisement

சம்பவம்: 10-செப்-2017

மதுரை டி.கல்லுப்பட்டி அருகே காரும் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
மதுரை திருமங்கலம் வீட்டில் 5 டன் குப்பையுடன் மனம் நலம் பாதித்த ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டிலிருந்து குப்பைகளை அகற்றும் நகராட்சி ஊழியர்.
ஜெய்பூரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
மியான்மரில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடில்லியில் உள்ள பாரத ஸ்டேட் பேங்க் பில்டிங்கில் தீ ஏற்பட்டதால் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ரியான் சர்வதேச பள்ளி வளாகத்தில் பலியான பிரதியுமான் சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெண்கள் கதறி அழுதனர் இடம்: குர்கான்
காசியாபாத்தில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலியானதால் பொதுமக்கள் வேனை தாக்கினர்.
அலிகாரில் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இந்த விபத்தில் இருவர் பலியானார்கள். சம்பவ இடத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
ஹரியானா மாநிலம் சிர்ஸாவில் நேற்று 85 மூட்டைகளில் வெடிமருந்து பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
நோய்டாவில் ஜேபி இன்ப்ராடெக் வீடு வாங்குபவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் பெய்த பலத்த மழை காரணமாக வீடு ஒன்று இடிந்து சேதமானது.
 
Advertisement