Advertisement

சம்பவம்: 09-செப்-2017

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வழியே பாயும் நல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நள்ளிரவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
நீலகரி மாவட்டம் கீழ்நடுகாணி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 பேரை பலிகொண்ட கோவை மாவட்டம் சோமனூர் பஸ்ஸ்டாண்டு மூடப்பட்டு போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மியான்மரில் இஸ்லாமியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை கண்டித்து காஷ்மீர் மாநிலம் அனந்த்டாக் அருகே போலீஸ் வாகனத்திற்கு வன்முறையாளர்கள் தீவைத்தனர்.
குர்கானில் ரியான் சர்வதேச பள்ளியில் படித்த மாணவன் கொலை செய்யப்பட்டதையடுத்து மாணவனின் தாயை தேற்றிய உறவினர்கள்.
செகன்தராபாத்தில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4.5 கிலோ எடையுளள தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர்.
அலகாபாத்தில் சிகிச்சா மித்ரா அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
சிகிச்சா மித்ரா அமைப்பினர் அலகாபாத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உ.பி., மாநிலம் அலகாபாத்தில் சிகிச்சா மித்ர அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக போராடினர். அவர்களை போலீசார் தடுத்தனர்.
 
Advertisement