Advertisement

சம்பவம்: 06-செப்-2017

சென்னை கிண்டி கத்திப்பாராவில் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் புகை மூட்டம் ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
திருப்பூர் நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நீவரத்துக்கு முன் வறண்ட நிலையில் இருந்த ஆற்றில் குடிபோதையில் படுத்திருந்த வாலிபர் வெள்ள பெருக்கில் இருந்து மீட்கப்பட்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரமலைகாடு அடிவாரத்தில் இடி மின்னல் தாக்கியதில் வெடிமருந்து குடோன் தரைமட்டமானது.
காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சின்னாடிபாளையத்தில் மரம் வேரோடு சாய்ந்தது.
தாம்பரத்தில் இருந்து கோவளம் சென்ற மாநகர பேருந்து பீர்க்கன்காரணை அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
மூணாறு அருகே ராஜமலை ஐந்தாம் மைலில் இரவில் உலா வந்த யானை.
கோவையில் பெய்த கனமழைக்கு ரயில்வே ஸ்டேஷன் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
பீஹாரில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்த சம்பவத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஜே.சி.பி. இயந்திம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இடம்:பாட்னா.
பீஹாரில் பணி நிரந்தரம், ஊதியம் வரன்முறை கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் நூதன போராட்டம் நடத்தினர். இடம்: பாட்னா.
டில்லியில் முக்கிய சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடிக்க துவங்கியது.
 
Advertisement