Advertisement

சம்பவம்: 10-ஆக-2017

சென்னையில் கள்ளத்துப்பாக்கி விற்க முயன்றாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நான்குபேர் (உள்படம்) பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள்.
தஞ்சை வெண்ணாற்றில் திருட்டுத்தனமாக மாட்டு வண்டியில் மணல் கொண்டு செல்லப்படுகிறது. அதிகாரிகள் கண்டு கொள்வார்களா...
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அடுத்த வதியம் பகுதியில் சாலையில் நடுவே யானையை வைத்து பணம் வசூலிப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் சாலையை கடக்க இடையூறு ஏற்படுத்திய சுற்றுலா பயணிகளை விரட்டியடிக்கும் யானை.
ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை கிராமத்தில் கழிவுகளால் கடற்கரையில் செத்து மிதந்த மீன்கள்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டையொட்டி மாணவர் அமைப்பினர் டில்லியில் பேரணி நடத்தினர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்முவில், பள்ளத்தில் வாகனம் விழுந்ததில் 9 பேர் இறந்தனர். காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
Advertisement