Advertisement

சம்பவம்: 06-ஆக-2017

இடுக்கி அருகே அடிமாலி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் திரண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்.
ம.பி.,யில் நடந்த வெங்காய ஊழலை சி.பி.ஐ., மூலம் விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் வெங்காய மாலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: போபால்
ராகுல் கார் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை கண்டித்து டில்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் தடுத்தனர்.
ராகுல் கார் மீது நடந்த தாக்குதலை கண்டித்து டில்லியில் டில்லி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் மாகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாட்டியாலாவில் சீன ராகியை தவிர்க்க வலியுறுத்தி குழந்தைகள் விழிப்புணர்வு பிரசசாரம் மேற்கொண்டனர்
ராகுல் கார் மீது தாக்குதல் நடந்ததை கண்டித்து மும்பையில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து போராடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை போலீசார் அப்புறப்படுத்தினர் இடம்: ஆமதாபாத்
ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் எடிகிபள்ளி அருகே பஸ் விபத்துக்குள்ளானதால் மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடந்த காஷ்மீர் போராளி அபித் ஹமித் மிர்ரின் இறுதி ஊர்வலத்தை சோகத்துடன் பார்த்த பெண்கள்.
 
Advertisement