சம்பவம்: 19-மே-2017
மதுரை கரும்பாலை நடுத்தெருவில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் பனைமரம் மற்றும் மின்கம்பம் உடைந்து வாகனங்கள் மற்றும் கடைகள் மீது விழுந்தன.
மதுராவில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் உயிரிழந்த நகைக் கடை உரிமையாளர் குடும்பத்தினர் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் மாநில பா.ஜ., அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பஸாவில் குழந்தை கடத்தலை கண்டித்து கோபம் அடைந்த மக்கள் கார் ஒன்றுக்கு தீவைத்து நாசமாக்கினார்கள்.
போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று போபாலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஞ்சியில் ஜார்க்கண்ட் விகாஷ் மோட்சா கட்சியினர் அக்கட்சி எம்.எல்,ஏ., வின் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கடையடைப்பில் டயர் ஒன்றை ரோட்டில் கொளுத்தினர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்கட்சி தலைவர் பிரேம் குமார் மற்றும் மற்ற பா.ஜ., எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்ட பேரணி ஒன்று நடந்தது.