Advertisement

சம்பவம்: 15-மே-2017

போக்குவரத்து சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று பஸ்கள் ஓடாத காரணத்தால் பயணிகள் அவதி அடைந்தனர். இடம்: சென்னை
லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க கோரி பிரதிநிதி பரிவார் என்ற அமைப்பின் சார்பில் டில்லி ஜந்தர் மந்தர் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நவ்சேரா பகுதியில் பாக் ராணுவம் தொடர்ந்து அத்து மீறி தாக்குதல் நடத்தி வருவதால் பாதிப்புக்கு ஆளான கிராமமககள் தங்கள் வீடுகளை காலி செய்தனர்.
மேற்கு டில்லியில் சந்தையில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்.
ரோடாக்கில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர்.
லஞ்ச ஊழல் புகார் விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் ஆம்ஆத்மி அமைச்சர் கபீல் மிஷ்ரா நேற்று டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
சென்னையில் நேற்று நடந்த சுரங்க வழிப்பாதை மெட்ரோ ரயில் துவக்க விழாவில் ரயிலில் பயணம் செய்ய குவிந்த மக்கள் இடம்: திருமங்கலம், சென்னை
மத்திய பாதுகாப்பு படை போலீசார் நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் லோகர் தாக்காவில் வெடி மருந்து பொருட்களை கைப்பற்றினர்.
பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் நடந்த வன்முறை சம்பவத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட பஸ்.
 
Advertisement