Advertisement

சம்பவம்: 14-மே-2017

பூட்டிய வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வீடு இடிந்தது. சம்பவத்தில் வாலிபர் பலியானார் இடம்: குளித்தலை அருகே வேதாசபுரம்.
கோவை மாவட்டம் திப்பம் பட்டியில் தனியார் தோட்டத்தில் இயங்கி வந்த மதுக்கடை பூட்டை உடைத்து கடையை பொதுமக்கள் சூறையாடினர்.
ஜலந்தரில் தீப்பிடித்து எரிந்த தொழிற்சாலையில் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
டில்லி ஆம்ஆத்மி எம்.எல்,ஏ., சஞ்சீவ் ஜா நேற்று புகாரில் சிக்கியுள்ள டில்லி அமைச்சர் கபில் மிஷ்ராவின் உண்ணாவிரதத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.
வாரணாசியில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறுமிக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குர்கானில் ராம்பிரஸ்தா பில்டர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஞ்சியில் குடியிருப்பு பகுதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு வாரணாசியில் பள்ளி மாணவிகள் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு பேனர் பிடித்து நின்றனர்.
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கண்டித்து நேற்று டில்லியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேசிய சிறுத்தை கட்சி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு பிகானரில் பள்ளிக்குழந்தைகள் விழிப்புணர்வு வாசகங்களை தாங்கிப்பிடித்தனர்.
 
Advertisement