Advertisement

சம்பவம்: 10-மே-2017

கோடையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் மதுரை சிம்மக்கல் ஜக்கையா தெருவில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் குடங்கள்.
கோத்தகிரி கட்டபெட்டு பஜார் பகுதியில் நடந்த விபத்தில் சேதமடைந்த அரசு பஸ்.
பகல் முழுவதும் வாட்டியடுத்த வெயிலுக்கு, குளிர்ச்சி தரும் விதமாக மழை மேகங்களுடன் கண்ணை பறித்த மின்னல். இடம்- சென்னை, கொடுங்கையூர்.
கோவை செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் டேங்கர் லாரி கவிழ்ந்தது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், மசினகுடியில் மாயார் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட கார்.
சேலம், சுகவனேஸ்வரர் கோவில் கோ சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் பசுமாடு சொர்ணாம்பிகை, ஆறு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், தற்போது காம்பில் இருந்து பால் தானாகவே சுரக்கிறது.
மேட்டுப்பாளையம் - குன்னுார் ரயில் பாதையில், ஹில்குரோவ் ஸ்டேஷன் அருகே, தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட, ரயில்வே ஊழியர்கள்.
உ.பி. மாநிலம் நொய்டா வில் உள்ள ஏற்றுமதி நிறுவன கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் கட்டடத்தில் இருந்து புகை மண்டலம் வெளியேறியது.
திரிபுராவின் பச்சரத்தால் ரயில் நிலையத்தில் சிக்னல் தெரியாமல் வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி தரையில் மோதி நின்றது.
மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திருமண கோஷ்டியினர் சென்ற கார் விபத்திற்குள்ளானதில் கார் பலத்த சேமடைந்துள்ள காட்சி.
 
Advertisement