X
Advertisement

சம்பவம்: 21-ஏப்-2017

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் ஹம்பபூரா அருகே தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஒருவரி்ன் மனைவியை மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராஞ்சியில் நிராஜ் சிங் கொலை வழக்கில் கைது ஆன பா.ஜ., எம்.எல்.ஏ., சஞ்சீவ் சிங் நேற்று கோத்வார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
ஜலந்தரில் சந்தேகத்திற்கு இடமான ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி காஜி பாபு நேற்று கோர்டில் ஒப்படைக்கப்பட்டான்.
ஷரன்பூரில் அம்பேத்கார் ஜெயந்தி ேஷாபயாத்ராவின் போது ஏற்பட்ட கலவரத்தை போலீசார் அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் உயர்வை கண்டித்து வாரணாசியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு மாநிலம் காஷ்மீர் பகுதியில் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகளை கண்டித்து மாணவிகள் ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோல்கத்தா நகரில் மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை போலீசார் கட்டுப்படுத்தி கைது செய்தனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement