Advertisement

பொது: 13-ஜூலை-2018

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு ஏற்படுத்த கின்னஸ் சாதனைக்காக நாடார் சரஸ்வதி கல்விநிறுவன மாணவ மாணவிகள் 6,321 பேர் சேர்ந்து 25 நிமிடங்களில் உருவாக்கிய கண்.
திருச்சியில் காலமான ராமானுஜ மடத்தின் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் உடல் நேற்று நல்லடக்கம் செய்ய ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
டில்லியில் நேற்று, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின், புதிய தலைமை அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து, பார்வையிட்ட பிரதமர் மோடி.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய பாலம் கட்ட மண் பரிசோதனை நடத்தப்பட்டது.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் பள்ளியில், மாணவிகள் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை அவிநாசி ரோடு, ஜி.ஆர்.டி., கல்லூரியில் நடந்த பேஸ் - டு - பேஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் டேவ் வாட்மோர் மற்றும் மகேந்திரா ஆகியோர் மாணவர்களுடன் உரையாடினர்.
டாக்டர்.உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் மற்றும் சென்னை பல்கலை இணைந்து நடத்திய உ.வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம் நூல் வெளியீட்டு விழா மற்றும் உ.வே.சா. நூல் நிலையத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா நேற்று சென்னை பல்கலையில் நடந்தது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நூலை வெளியிட்டார்
தன் குஞ்சு பசியாற பாசத்துடன் இரை கொடுக்கும் புல்புல் பறவை இடம்: கோல்கட்டா
 
Advertisement