Advertisement

பொது: 09-ஜூலை-2018

சிங்கம்புணரி பகுதியில் தென்மேற்கு பருவமழையை பயன்படுத்தி நிலக்கடலை விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயி.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., பல்கலை பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட, 105 ஆண்டுகள் பழமையான, நீராவி ரயில் இன்ஜின், பீஹார் மாநிலம், தர்பங்கா ரயில்வே ஸ்டேஷன் முன், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை சென்று, திரும்பியவர்களுக்கு, சேலம் பிரசன்ன வரதராஜ பெருமாள் தேவஸ்தான மண்டபத்தில், வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளை.
கோவை மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் நடந்த சட்ட கல்வியறிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குலுவாடி ரமேஷ் பேசினார்.
மதுரையில் டி.எம்.சவுந்தரராஜன் ரசிகர் மன்ற விழாவில் டி.எம்.எஸ்.விருதை சினிமா பின்னணி பாடகர் ஜெயசந்திரனுக்கு, முன்னாள் எம்.பி., ராம்பாபு வழங்கினார். இடமிருந்து தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு, டி.எம்.எஸ்.செல்வகுமார், மன்ற தலைவர் பாலன், எம்.எல்.ஏ., சரவணன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பால்காம் மாவட்டத்திலுள்ள அமர்நாத் குகைகோவிலுக்கு சென்ற பக்தர்களின் ஒரு பகுதி.
ஆமதாபாத்தில் நடந்த ஜெகநாத் ரதயாத்திரை விழாவில் பைக் வீரர் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்டார்.
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பெங்களூருவில் நடந்தது. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., வேடம் கொண்ட குழந்தைகள்.
 
Advertisement