Advertisement

பொது: 07-ஜூலை-2018

ஜவுளித்துறையில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். உடன் தமிழக அமைச்சர் ஓ.எஸ் மணியன் மற்றும் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர் கே.என். பிரபு. இடம் : எம்.ஆர்.சி நகர்.
ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு கடல் பகுதியில் இயற்கை அழகை ரசித்தவாறு படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.
மூணாறு அருகே லக்கம் நீர்வீழ்ச்சியில் மிதமான நீர் கொட்டுகிறது. குளிர்ந்த நீரில் குளித்து மகிழும் சுற்றுலாபயணி.
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் மாநகராட்சியில் செயல்படாத நீருற்று மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது
புதுச்சேரி அரசு பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
ஆமதாபாத்தில் நடக்கவுள்ள ஜெகந்நாத் ரத யாத்ரா திருவிழாவையொட்டி வண்ண ஆடை அணிகலன்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கலைஞர் இடம்: ஆமதாபாத்.
பீகார் மாநிலம் கிசன்கன்ஜ் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக மென்சி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பால்காம் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு யாத்திரையில் ஈடுபட்டுள்ள பக்தர்கள்.
 
Advertisement