Advertisement

பொது: 03-ஜூலை-2018

கம்பம் பகுதிீயில் முதல் போக விவசாய பணிகள் பாரம்பரிய முறைப்படி ஏருகளில் காளை பூட்டப்பட்டு நடந்தன
காரியாபட்டியில் கனமழை கொட்டி தீர்த்ததால் பஸ்ஸ்டாண்டு முன்பு தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தலைநகர் டில்லியில், கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு உற்சாகமாகச் சென்ற, மாணவ - மாணவியர்.
பீஹாரில், நேற்று பெய்த பலத்த மழையால் , கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தனாபூர் பகுதியை தண்ணீர் சூழ்ந்தது. அங்கு வசித்த பொதுமக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறினர்.
ஜம்மு - காஷ்மீரில், பிரசித்தி பெற்ற அமர்நாத் யாத்திரை துவங்கியுள்ளதை அடுத்து, பகல்காம் முகாமில் குவிந்துள்ள பக்தர்கள் .
விருதுநகர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமமக்கள் கட்டப்பெருமாள் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஊரணியில் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்தனர்.
வானில் இரட்டை வானவில் : நேற்று மாலை பொழுது சில்லென்று சாரல் மழை பெய்தது மாலை வெயிலில் இரட்டை வானவில் தோன்றியது. இடம் விழுப்புரம் பை பாஸ் சாலை.
வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் சாரல் மழை பெய்தது. இடம்: அமைந்தக்கரை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பால்காமில் அமர்நாத் கோவில் யாத்திரைக்கு புறப்பட்டு சென்ற பக்தர்கள்.
 
Advertisement