Advertisement

பொது: 16-ஏப்-2018

சபரிமலையில் நேற்று சித்திரை விஷூ கொண்டாடப்பட்டது. பக்தர்களுக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கைநீட்டம் வழங்கினார்.
சீக்கியர்களின் புத்தாண்டு தினமான பைசாகி மேளா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் குதிரைகளில் சாகசம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
ராணுவ கண்காட்சியை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல்கள்.
திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட, 18-ம் நுாற்றாண்டின் புதிர் கல்வெட்டு
திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள்.
மலையாள வருடப்பிறப்பான விஷுவை முன்னிட்டு வாழ்த்துகளை பரிமாறிகொண்ட பெண்கள்.
கொடியேற்றம்... கோவை சித்தாபுதூர் ஐயப்பசுவாமி கோவில் 49 வது ஆண்டு திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடுகு தோட்டத்தின் நடுவே ஆடுகளை மேய்த்துக் கொண்டுள்ளனர்
ம.பி., தலைநகர் போபாலில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியின் போது இளம் பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அமிர்தசரில் உள்ள பொற்கோவிலில் நடந்த பைசாகி திருவிழாவின் போது பக்தர்கள் விளக்குகள் ஏற்றினர்.
 
Advertisement