Advertisement

பொது: 15-பிப்-2018

மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் மோடி எழுதிய ‛எக்சாம் வாரியர்ஸ்' என்ற புத்தகத்தை, மும்பை பள்ளிகளில் வெளியிட்ட மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி.
புதுச்சேரி தெருவோர டீக்கடையில் நமது டீ மாஸ்டரையே மிஞ்சி விடும் வகையில் டீ ஆற்றி, தனது ஆசையை தீர்த்துக்கொண்ட இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர்.
ஹரியானா மாநிலம் குர்கானில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவபெருமானை வழிபட்ட பக்தர்கள்.
உ.பி., மாநிலம் கான்பூரில் உள்ள சந்திரசேகர ஆசாத் பல்கலையில், விவசாயம் குறித்த கருத்தரங்கை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில், பாரம்பரிய உடையணிந்து காதலர் தினத்தை கொண்டாடிய காதலர்கள்.
தஞ்சாவூர் அடுத்த, வல்லத்தில், நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், சீறி வந்த காளையை அடக்கும் மாடுபிடி வீரர்கள்.
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு, புது வரவாக, ‛பிளம்மிங்கோ' பறவைகள், கூட்டம் கூட்டமாக வந்து, இரை தேடும் ரம்மியமான காட்சி.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர், கென்னத் ஐ கெஸ்டர், மாமல்லபுரம் கடற்கரை கோவிலை கண்டுகளித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பின் சார்பில் நடந்த பேரணியில், வாகன ஓட்டிகளிடம் ஒலி மாசு தவிர்க்க வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவியர். இடம்: கோயம்பேடு, சென்னை.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்.
பழநி ஆயக்குடி பெரியகுளத்தில் தண்ணீருக்கு நடுவே இரைக்காக காத்திருந்த வாத்துகள்.
அன்புக்கு மொழி, சாதி, மதம் பணம் இவை ஏதும் தேவை இல்லை எவரிடமும் அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைப்பது அன்பு மட்டும். இடம் : கோவை, இருகூர்.
 
Advertisement