Advertisement

பொது: 14-பிப்-2018

கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.
அலகாபாத்தில் மஹா சிவராத்திரி கொண்டாட்டத்தின் நடுவே செல்பி எடுத்த கலைஞர்கள்.
குளு குளு சிம்லாவில் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. இடம்: குப்ரி.
தர்மபுரி மாவட்டம் கங்கா பாளையத்தில் நடந்த எருது விடும் விழா.
அதிகாலையில் வயலில் வேலையை துவங்கிய விவசாயிகள். இடம்: கோல்கட்டா.
ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் பாரம்பரிய மாட்டு வண்டியில் பயணம் செய்த வெளிநாட்டவர்கள்.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவில் சிவலிங்கத்திற்கு, பாலாபிஷேகம் செய்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் சீனா புத்தாண்டு மற்றும் வசந்த காலம் வருவதையொட்டி, நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சீன கலைஞர்கள்.
பீஹார் மாநிலம், பாட்னாவில் உள்ள சிவன் கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, வழிபட்ட பெண்கள்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காயமடைந்தவருக்கு ஆறுதல் கூறிய ராணுவ அமைச்சர் நிர்மலா சிதாராமன். இடம்: ஜம்மு.
டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு ஊராட்சிகளில் பிரதம மந்திரி எரிவாயு திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் பங்கேற்றனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் முன் உரையாற்றிய சத்குரு ஜக்கி வாசுதேவ்.
 
Advertisement