Advertisement

பொது: 07-பிப்-2018

உ.பி., மாநிலத்தில் துவங்கிய பிளஸ் 2 தேர்வை மாணவியர் ஆர்வமுடன் எழுதுகின்றனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அக்ஷரம் இண்டர் நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த விமானத்தில் சென்னை அழைத்து செல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
டில்லியில் சர்வதேச கார் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பழைய கார்கள் முன் நடன கலைஞர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை
மூணாறு அருகே பாம்பாற்றில் நீர் வரத்து குறைந்ததால் மறையூர் அருகில் உள்ள தூவானம் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் குறைவாக விழுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே அய்யம்புள்ளி பகுதியில் விளைந்த நெல்லை மூடையிட்டு லாரியில் ஏற்றும் பணி நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஆலத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.
டில்லியில் பள்ளி ஒன்றில் நடந்த பெண்களுக்கான மாத விலக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உலக அழகி பட்டம் வென்ற மானுஷி சில்லார் பங்கேற்றார்.
 
Advertisement