Advertisement

பொது: 04-டிச-2017

கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் அறிவியல் உருவாக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போடி சி.பி.ஏ., கல்லூரியில் தீயணைப்புப்படடை வீரர்கள் சார்பில் தீ தடுப்பு குறித்து தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு செய்து காண்பித்தனர்
காரியாபட்டி சாய்பாபா கோவிலில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்.
சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்பின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின் சென்னை மெரினா பீச்சில் விளையாடி மகிழ்ந்தனர்.
டில்லியில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழக வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் உலக அழகி மானுஷி சில்லார் பங்கேற்றார்.
நாகாலாந்து மாநிலம் கிஸாமா கிராமத்தில் நடந்த பாரம்பரிய திருவிழாவில் கலந்து கொண்ட பழங்குடியினர்.
மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு புலம் பெயர்ந்துள்ள பறவைகள்.
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி சென்னை கபாலீஸ்வரர் கோவில் அருகே விற்பனைக்காக அகல் விளக்குகளை தயார் செய்யும் வியாபாரி.
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி லட்சம் தீபங்களால் ஜொலித்த மதுரை மீனாட்சி அம்மன் பொற்றாமரைக்குளம்.
 
Advertisement