Advertisement

பொது: 02-டிச-2017

விருதுநகர் ப்ளே ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சியில் மாறுவேடம் அணிந்து வந்த குழந்தைகள்.
தேவிப்பட்டினம் அருகே கோப்பேரிமடம் பகுதியில் உப்பை மழையிலிருந்து பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.
சாயல்குடி அருகே முந்தல் கடற்கரையில் பார்க்கும் தூரத்தில் தெரியும் நல்ல தண்ணீர்த் தீவின் எழில்மிகு தோற்றம்.
நாகலாந்து மாநிலம் உருவான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிசாமா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து பழங்குடியினர் விழாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மிருக காட்சி சாலையில் இடம் பெற்ற வெள்ளை நிற பெலிகான் பறவைகள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சுதீந்திரம் மக்கள் படகுகள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை பாதுகாப்பாக படகுகள் மூலம் அழைத்துச் செல்லும் மீட்பு படையினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சுதீந்திரம் கிராமம்.
 
Advertisement