Advertisement

பொது: 30-நவ-2017

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டி நடந்தது.
தொடர் மழையால் பழநி வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சும்மாபட்டி சந்தனமாரியம்மன் கோயில் விழாவில் அலங்காரத்தில் அம்மன்.
இளையான்குடி அருகே புதுக்கோட்டையில் குடத்தில் தண்ணீர் எடுத்து மிளகாய் செடிகளுக்கு ஊற்றி விவசாயம் செய்து வருகி்னறனர்.
சாயல்குடி அருகே கன்னிகாபுரியில் நேற்று பெய்த கனமழையால் வயல் வெளியில் தண்ணீர் தேங்கி உள்ளது.
சபரிமலை மண்டல கால பூஜையின் 14வது நாளான நேற்று மதியம் நடைபெற்ற களப பவனி.
ஆந்திர மாநிலம் இருக்கம் தீவில் உள்ள வடகோடி பகுதியிலிருந்து எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தினம் இரண்டு மணி நேரம் படகு பயணம் செய்து தமிழக பள்ளிகளுக்கு வந்து செல்லும் மாணவ மாணவியர் இடம்: கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்புக்குளம் கிராமம்.
அமிர்தசரில் நடந்த சர்வதேச போல்க் திருவிழாவில் வண்ணமயமான பங்க்ரா உடையணிந்து கலந்து கொண்ட இளைஞர்கள்.
டில்லி யமுனை ஆற்றில் படகில் அமர்ந்து பறவைகளுக்கு ஒருவர் உணவளிக்கிறார்.
 
Advertisement