Advertisement

பொது: 29-நவ-2017

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை சிவன் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பைரவர் சிலை.
பழநி பாலசமுத்திரம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைக்கு எழுந்தருளிய அகோபில வரதராஐப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி.
கொட்டுதே...! தொடர் மழையால் திண்டுக்கல் மாவட்டம் பழநி வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு நடத்தினர்.
பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே புதிய பாலம் அமைக்க டிரம்பிள் டோட்டல் ஸ்டேஷன் கருவி மூலம் ஆய்வு செய்த ஊழியர்கள்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 67 வயது மூதாட்டி செல்லத்தாய் என்பவருக்கு பட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.இடம்: சென்னை, பல்கலை. நூற்றாண்டு விழா அரங்கம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவின் ஆறாம் நாளையொட்டி நடந்த உற்வசத்தில் 63 நாயன்மார்களை மாணவர்கள் தோளில் சுமந்து மாட வீதி உலா வந்தனர். உள்படம்: வெள்ளி யானை வாகனத்தில் அருள்பாலித்த உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்,
மும்பையில் நடந்த சூப்பர் டான்சர்-2 நடன நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் ரேகா, ஷில்பாசெட்டி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியாளர்களுடன் நடனமாடினர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்து மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
உலக தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் ஆலோசகர் இவாங்கா, பிரதமர் மோடியை சந்தி்த்தார். இடம்: ஐதராபாத்.
 
Advertisement