Advertisement

பொது: 11-அக்-2017

கண்டேன் பசுமையை...! பருவ மழையின் பயனாய் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் உயிர் பெற்று பசுமை திரும்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இடம்:கிணத்துக்கடவு.
சுத்தம் என்பது நமக்கு...! : தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பழநியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்
தமிழகத்தில் மிரட்டி வரும் டெங்கு கொசுவை ஒழித்திட விழி்ப்புணர்வு மேற்கொண்ட மாணவர்கள். இடம்: சென்னை.
உலக மனநல வாரத்தை முன்னிட்ட சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மனநல மருத்துவத்துறை சார்பில் நடந்த விழி்ப்புணர்வு ஊர்வலத்தில் பதாகைகளை ஏந்தி சென்ற செவிலியர்கள்.
சென்னை பரங்கிமலையி்ல் உள்ள தலைமை அஞ்சலகத்தில் நேற்று துவக்கி வைக்கப்பட்ட நடமாடும் அஞ்சலகம்.
டில்லியில் நடந்த இந்திய வாட்டர் வீக் 2017 நிகழ்ச்சி துவக்க விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நினைவு பரிசு வழங்கினார்.
விமானப்படை அதிகாரிகளின் கருத்தரங்கம் டில்லியில் நடக்க உள்ளது. இது தொடர்பாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரபஞ்ச அழகி -2016 பட்டம் பெற்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரிஸ் மிட்டேனியர் உ.பி.யில் உள்ள தாஜ்மஹாலுக்கு வந்திருந்தார்.
 
Advertisement