Advertisement

பொது: 08-அக்-2017

பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி மற்றும் இஸ்ரோ சார்பில், உப்பளம் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை, கவர்னர் கிரண்பேடி புறாவை பறக்கவிட்டு துவக்கி வைத்தார். அருகில் இஸ்ரோ விஞ்ஞானி வெங்கட்ராமன், பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ்.
பழநி கோயில் யானை கஸ்தூரி நேற்று நீச்சல் குளத்தில் ஆனந்தமாய் குளித்தது.
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம்.
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு முகாமை பொருளாளர் ஜவஹர், உறவின் முறை தலைவர் முருகன் மற்றும் நடிகர் தாமு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பழநி பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த லட்சுமி நாராயணப் பெருமாள்.
சிவகங்கை காஞ்சிரங்கால் திருவேட்டை அழகு அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வனவிலங்குகள் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்.
சென்னை லலித் கலா அகடாமியில் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரி மாணவர்களின் ஓவிய கண்காட்சி நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகல்விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் இடம்: மீரட்.
நாகலாந்தின் திமாபூரில் நடந்த கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடனமாடிய குழந்தைகள்.
 
Advertisement