Advertisement

பொது: 04-அக்-2017

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நேற்று மழை பெய்வதற்காக திரண்டிருந்த கருமேகக் கூட்டம் பார்ப்பவர்களை பெரிதும் கவர்ந்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று காலை மழை சற்று குறைந்திருந்த நிலையில் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பூங்காவில் பூத்துள்ள சிகப்பு மலர்களை போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்.
முதல் பருவமுறைப் பாடங்களையும் விடுமுறையையும் முடித்து, முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவியர்களுக்கு இரண்டாம் பருவமுறைக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டது. இடம்: பிரசிடென்சி அரசினர் பெண்கள் பள்ளி
சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக்கல்லூரியில் நடந்த டெங்கு விழிப்புணர்வு முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி துவங்கியது. .
தொடர் விடுமுறையையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 82.09 அடியில் கடல் போல் காட்சியளித்தது.
அரசு முறை பயணமாக டிஜிபவுட்டி செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு வழியனுப்பி வைக்கும் முப்படை தளபதிகள். இடம்; ஜனாதிபதி மாளிகை. , டில்லி.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி தீபம் ஏற்ற களி மண்ணால் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.இடம: கோல்கட்டா, மேற்குவங்கம்.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடக்கும் குங்குமத் திருவிழாவில் பங்கேற்ற பிரபல பாப் இசை பாடகி உஷா துப், உடன் பங்கேற்றவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
 
Advertisement