Advertisement

பொது: 13-செப்-2017

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே கணக்கன்பட்டி பகுதியில் மாடுகள் பூட்டி உழுது மக்காச்சேளம் விதைக்கும் பணி நடந்தது.
மதுரை-மேலூர் அருகே வெள்ளளூர் ஏழை காத்த அம்மன் கோயில் கன்னிப்பெண் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம் நேற்று இத்திருவிழா கொண்டாடப்பட்டது.
கேரளாவில் பெய்த மழையால் மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் உள்ள ராஜமலையில் அருவிகள் உருவாகியுள்ளன.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மயிலாடுதுறையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் காவிரியில் புனித நீர் ஊற்றப்பட்டது.
செண்டலங்கார செண்பக மன்னார்குடி ஜீயர் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆகியோர் ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் இருந்து யாகசாலை பூஜைக்காக புனித நீர் எடுத்துச்சென்றனர்.
காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்கத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
ஜார்க்கண்ட் போலீஸ் படையில் புதிதாக சிறப்பு நக்சல் ஒழிப்பு படை சேர்க்கப்பட்டது. தீவிர பயிற்சி பெற்ற வீரர்கள் சாகசம் மற்றும் ஒத்திகை செய்து காட்டினர்.இடம்: ராஞ்சி.
டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தல் நடந்தது. இதில் ஒட்டளிக்க அடையாள அட்டையுடன் நீண்ட வரிசையில் நின்றிருந்த மாணவ, மாணவிகள்.இடம்: டில்லி.
இந்தியா வந்திருந்த பெலாரஸ் அதிபர் லூகாஸ் ஹென்கோவை ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடியும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் வரவேற்றனர். இடம்:டில்லி.
 
Advertisement