Advertisement

பொது: 10-ஆக-2017

விற்பனைக்கு ரெடி...! விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள்.
அதிசயம்...! வத்தலக்குண்டு அருகே விவசாயி தோட்டத்தில் ஒரே கொத்தில் காய்த்துள்ள மாங்காய்கள்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கால்வாயில் கரைபுரண்டு ஒடிய காட்சி.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை, சூலூர் விமான படை தளத்தில் ‛‛ஏர் பெஸ்ட்'' எனும் போர் விமான கண்காட்சி நடந்து வருகிறது. இதை பார்வையிட்ட பொதுமக்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசுவாமி கோயில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சாலக்குடி அதிரப்பள்ளி நீர்வீழச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேற்குவங்கத்தி்ல் பெய்து வரும் கனமழை காரணமாக மீன் சந்தையில் விற்பனை சரிந்தது. விற்பனையாகாமல் குவிந்துள்ள மீ்ன்கள்.இடம்:கோல்கட்டா.
பீஹாரில் பள்ளி ஒன்றில் நடந்த ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் நவீன துப்பாக்கியை இயக்கி பார்க்கும் மாணவிகள்.இடம்: பாட்னா.
கல்வி ,வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் பிரம்மாண்ட பேரணி நடத்திய மராட்டிய சமூகத்தினர். இடம்: மும்பை.
 
Advertisement