Advertisement

பொது: 09-ஆக-2017

பாரம்பரியம்...! கோவை சுற்றுலாத்துறை சார்பில் கோவை தாஜ் விவாந்தா ஓட்டலில் கேரளா பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஒத்திகை...! சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட காவல் படையினர். இடம் : ராஜாஜி சாலை,சென்னை.
ராகவேந்திரா சுவாமிகளின் 346வது மஹோத்ஸவ விழா, திருப்பூர் பார்க் ரோடு ராகவேந்திரா கோவிலில் நடந்து வருகிறது. அதில்,சிறப்பு அலங்கராத்தில் சீதாராமர்.
சென்னையில் பள்ளி கல்வித்துறை செயலர் உதயசந்திரன் மற்றும் பாடத்திட்ட கலைத்திட்ட குழு தலைவரும், அண்ணா பல்கலை. முன்னாள் துணை வேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்த தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி , புதிய பாடத்திட்டத்திற்கான கருத்துருவை வழங்கினார்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவளிக்கு ரிஷப வாகனத்தில் புறப்பட்ட சுவாமி சந்திரசேகர் கவுரி அம்பாள்.
கடமையே கண்ணாக உணவு தானிய மூடைகளை கை வண்டியில் ஏற்றி சந்தைக்கு புறப்பட தயாராகும் தொழிலாளி. இடம்: கோல்கட்டா, மேற்குவங்கம்
 
Advertisement