Advertisement

பொது: 05-ஆக-2017

மதுரையில் விபத்தை தடுக்கும் வகையில் ெஹல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ரோஜாப்பூ மற்றும் சாக்லெட் கொடுத்து வாழ்த்தினார்.
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே கேரள எல்லையில் அமைந்துள்ள கம்பம்மெட்டில் எல்லை தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் மணல் மேவி விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பழைய ஜீன்ஸ் பேண்ட்கள் மறு விற்பனைக்காக சலவை செய்யப்பட்டு உலர்த்தப்படுகிறது.
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவை கெம்பட்டி காலணி எல்.ஜி., தோட்டத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு கனி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிரம்மபுத்திரா நதியின் ஓரத்தில் குதியாட்டம் போடும் சிறுவர்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தன் குழந்தையை தொட்டிலில் தூங்க விட்டு விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்.
சிம்லாவில் மழைக்கு பின் நகரை அலங்கரித்த வெண்மேக கூட்டம் ரம்மியமாக உள்ளது.
 
Advertisement