Advertisement

பொது: 17-ஜூலை-2017

வறட்சியின் பிடியில் இருந்த வனப்பகுதிகள், வருண பகவானின் கருணையால், துாரிகை இல்லாத ஓவியம் போல, பசுமை போர்த்திய புல்வெளியாக மாற்றம் பெற்றுள்ளன; கோடை காலத்தில் உணவு கிடைக்காமல் ஊருக்குள் புகுந்த காட்டு யானைக்கு, இந்த இடத்தை விட்ட செல்ல மனம் வருமா...? இடம்: பந்தலுார் அருகே அத்திக்குன்னா வனப்பகுதி.
பழமை மாறாத மதுரை கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திண்டுக்கல் அருகே குட்டியபட்டி அருகே காய்த்துள்ள புடலங்காய்கள்.
பகிர்ந்து உண்டு வாழவேண்டும் என்பதை மக்களுக்கு கற்று கொடுக்கிறேதோ இந்த பறவைகள் இடம்: தேனி
பருவமழை பொய்த்தால் சிறிதளவே தேங்கியுள்ள நீரை குடிக்கும் ஆடுகள் இடம்: விருதுநகர் ஒண்டிப்புலி கல்குவாரி
சிவகங்கை பஸ்ஸ்டாண்ட் அருகே ரோட்டை கடக்க முயன்று விபத்தில் சிக்க இருந்த மூதாட்டியை காப்பாற்றிய திருநங்கைகள்.
சீறிப்பாய்ந்து எழும் அலை கண்களுக்கு விருந்து அளிக்கிறது இடம்: கன்னிராஜபுரம் ரோஜ்மா கடற்கரை
கும்பகோணம் பள்ளி தீவிபத்து 13 வது நினைவு தினமான நேற்று உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினர் இடம்: கும்பகோணம்.
உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று திருவண்ணமலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அமிர்தசரில் பொற்கோவில் அருகே செல்பி எடுத்துக் கொள்ளும் பெண்கள்.
ஆகஸ்ட் 25ல் கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மும்பையில் தயாராகும் விநாயகர் சிலை.
புதுடில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் நடனமாடி பார்வையாளர்களை அசத்திய மயில்.
 
Advertisement