Advertisement

பொது: 13-ஜூலை-2017

சென்னை தி.நகர் ஜெயின் மகளிர் கல்லூரியில் ஆர்_1 மாம்பலம் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவிகள் போக்குவரத்து வீதி முறை அடங்கிய பிரசுரங்களை வாகன ஒட்டிகளுக்கு வழங்கினார்.
இந்தாண்டு அறிமுகம் அடுத்த மாதம் நடக்க உள்ள விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு புதிய வரவாக சிவனோடு கணபதி, இருப்பது போல் பல்வேறு உயரங்களில் சிலைகள் தயாரிக்கின்றனர். விலை ரூ. 4000 முதல்.இடம்: மதுரை மாட்டுத்தாவணி.
சென்னை ரைபில் கிளப் சார்பில் மாநில அளவிலான 43வது துப்பாக்கி சுடும் போட்டி ஆவடி அருகே வீராபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சியில் ஈடுபட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்கான பணிகள் துவங்கின.
ராமநாதபுரத்தில் மழை பெய்து பல மாதங்களாகிவிட்ட நிலையில் நேற்றுமாலை கருகருவென திரண்ட மேகத்தினால் மழை பொழியும் என எதிர்பார்த்த மக்களை ஏமாற்றியது கருமேகம்.
மூணாறு அருகே மழையின்றி நீர்வரத்து குறைந்த வாளரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரை வெட்காளியம்மனுக்கு ஆனி மாத திருவிழாவவையொட்டி 108 குடங்கள் பால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விநாயகர் சதூர்த்தி விழா வரும் ஆகஸ்ட் 25-ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் தயாராகும் பிரமாண்ட விநாயகர் சிலைகள்.
அரியானாவில் குருகிராம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் திணறின.
இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 16 வயது இளம் பாலியல் வன்கொடுமைக்கு பலியானார். அவரது நினைவிடத்தில் பள்ளி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இடம்:சிம்லா.
 
Advertisement