Advertisement

பொது: 12-ஜூலை-2017

சட்டசபையில் மக்கள் பிரநிதிகளின் விவாதத்தைக்காண ஆர்வத்துடன் தலைமைச் செயலகம் வந்த, சென்னை, எழும்பூரைச் சேர்ந்த மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் சர்வீஸ் கல்லூரி மாணவியர்கள்.
ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமணையில், உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.
உடுமலை பகுதியில் காய்ச்சல் பரவி வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக நகராட்சி சார்பில் ராஜலட்சுமிநகர் நகராட்சி நடு நிலைப் பள்ளியில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது.
போருர் ஏரியிலிருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கும் திட்டம். சுத்திகரிப்பு நிலையம் நீர் முலம் சென்னை நகர மக்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்கியது .
புதுச்சேரி மீன்பிடி துறை முகத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ள ட்ரெஞ்ஜிங் கப்பல்.
உலக மக்கள் தினம்: டில்லியின் கிழக்கு பகுதியான மந்தோலியில் ரயிலில் கூட்ட நெரிசலோடு பயணம் செய்த பயணிகள்.
காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பள்ளி மாணவிகள். இடம்: ஆமதாபாத், குஜராத்.
காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் சாலை வழியாக யாத்ரீகர்கள் செல்லும் வாகனங்கள் பலத்தபாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பெய்த மழைக்கு பின் கங்கை நதியின் மணிகார்னிகா காட்டின் தோற்றம்.
 
Advertisement