Advertisement

பொது: 16-ஜூன்-2017

புதுச்சேரி என்.சி.சி. தலைமையத்தில் நடந்து வரும் சிறப்பு முகாமில் என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பழநி அருகே கணக்கன்பட்டி பகுதியில் கிணற்றுப் பாசனத்தில் விளைந்துள்ள வெள்ளைச் சோளக் கதிர்கள்.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு ரோட்டில் மரங்கள் இருபுறமும் வளர்ந்து பசுமையாக உள்ளது.
இயற்கை முறையில் உரம் ஏற்றுவதற்காக விளைநிலத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆடுகள் இடம்: ஆண்டிபட்டி அருகே அனுப்பபட்டி
தினமும் மாலை கருமேகங்கள் சூழ்கின்றன. ஆனால் மழைப் பொழிவை காண முடியவில்லை இடம்: விருதுநகர்.
ராமநாதபுரம் அருகே தேவிபட்டணத்தில் நவபாஷாண சிலைகளுக்கு கோடை வெப்பம் காரணமாக கூட்டமின்றி வெறிச்சோடியது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பெய்து வரும் பலத்த மழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரத்தில் மணல் மூடைகளை அடுக்கி வருகின்றனர்.
சர்வதேச யோகா தினம் வரும் 21ல் அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி நடக்க உள்ள விழாவிற்காக யோகா பயிற்சி பெறும் மாணவியர் இடம்: ஆமதாபாத், குஜராத் மாநிலம்.
50 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை தரம் பிரித்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் கங்கை நதி பகுதி பருவமழை மேகங்களால் குளுமையாக காட்சி அளிக்கிறது.
 
Advertisement