Advertisement

பொது: 11-ஜூன்-2017

ஊட்டியில் பெய்த சாரல் மழை, குடையுடன் தாவரவியல் பூங்காவில் உலா வந்த சுற்றுலா பயணிகள்.
பழநி - கொடைக்கானல் மலையை கார் மேகங்கள் சூழ்ந்தது மழை பொழிவதற்கு தானோ.
மதுரை புதூர் கொடிக்குளம் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவில் வைக்கப்பட்ட குதிரை சுவாமி சிலைகள்.
பள்ளி விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் ஓடி விளையாடி பொழுதை கழிப்பதில் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை இடம்: தேனி மாவட்டம் அரப்படிதேவன்பட்டி
பசுமையாக காட்சியளிக்கும் எள்ளு செடிகள் இடம்: தேவதானம்.
மத்திய அரசின் பெண்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டில்லியில் நேற்று சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு பயிற்சி அளித்த போலீஸ் அதிகாரி.
விவசாயிகள் நலனுக்காக உயிர்விட தயார். ம.பி., முதல்வர் உருக்கம், மந்தாசூரில் விவசாயிகள் பலியான சம்பவத்தை முன்னிட்டு முதல்வர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த வேம்பாகவுண்டன்பதூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளையை அடக்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்.
உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை மெரினா பீச்சில் கொதிக்கும் மணலில் சுண்டல் விற்கும் சிறுவன்.
 
Advertisement