Advertisement

அரசியல்: 05-ஜூலை-2018

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, கொண்டாடிய ஆம் ஆத்மி கட்சியினர். இடம்: போபால், மத்தியபிரதேசம்.
கோவை அவினாசி ரோட்டிலுள்ள மீனாட்சி மஹாலில நேற்று நடந்த காங்., கட்சியின் கோவை மாநகர மாவட்ட பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்திற்கு வந்த காங்., கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசருக்கு ஆரத்தி எடுத்தனர்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அம்மாநில துணை கவர்னருக்கும் இடையேயான அதிகார சண்டையில் வெற்றி பெற்ற முதல்வர் கெஜ்ரிவாலை அரசாங்க ஊழியர்கள் வாழ்த்தினர்.
உ.பி., மாநிலம் மிர்ஜாபூர் சென்ற அக்கட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷா அங்குள்ள விந்தியாவாசினி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டில்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
டில்லி துணைகவர்னர் அனில் பய்ஜால் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க அதிகாரம் இல்லை என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
உ.பி., மாநிலம் கான்பூருக்கும், புதுடில்லிக்கும் இடையேயான விமான போக்குவரத்தினை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய விமானபோக்குவரத்து அமைச்சர் சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
 
Advertisement