Advertisement

அரசியல்: 02 ஜூலை-2018

ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, ஒரு வார விழாவில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்... இடம் : சேத்துப்பட்டு, சென்னை...
புதுச்சேரி காங் கட்சி அலுவலகத்தில் மகிளா காங் பிரிவுக்கு சக்தி எனும் தனி மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பத்தை முதல்வர் நாராயணசாமி, கட்சி தலைவர் நமச்சிவாயம், மகளிர் காங் பொது செயலாளர் நக்மா ஆகியோர் வெளியிட்டனர்.
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா மற்றும் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர்ராவ் இருவரும் ஐதராபாத்தில் சந்தித்து பேசினர்.
உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி இருவரும் டெஹ்ராடூனில் சந்தித்து பேசினர்.
புதுடில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலியான வீட்டை ஒட்டி வசிக்கும் மக்களை மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரித்தார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட புதுடில்லி அம்பேத்கார் சர்வதேச மையத்தில் நின்று கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் பியூயஸ் கோயல் (வலது ஓரம்).
ஜி.எஸ்.டி., வரி விதிப்பின் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி மத்திய நிதியமைச்சர் பியூயஸ் கோயல் மற்றும் நிதி செயலாளர் ஹஸ்முக் ஆதியா இருவரும் புதுடில்லியில் அம்பேத்கார் சர்வதேச மையத்தில் சந்தித்து பேசினர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய இணையமைச்சர் மனோஜ் சின்கா இருவரும் புதுடில்லியில் நடந்த ஐ.சி.ஏ.ஐ., பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா மற்றும் மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு அமைச்சர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் வந்த போது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பின் ஓராண்டு நிறைவையொட்டி புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
 
Advertisement